தமிழ்நாடு மின்சார துறையில் உள்ள நிர்வாக பிரிவில் உதவி பணி தொகுதி அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 38 பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களை, அடிப்படை பதவியான இளநிலை உதவியாளர் பணிக்கு பதவி இறக்கம் செய்வதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் மின்வாரிய தலைவரிடத்திலிருந்து அறிவிப்பு வந்தது. இதுகுறித்து கடந்த 8 ஆம் தேதி அறிவிப்பு வந்த நிலையில், இது தொடர்பாக தங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தும் இதுவரை எந்தவித முறையான பதிலும் கிடைக்காத காரணத்தினால் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் எத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசியே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *