திருச்சி மாவட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, சோமரேசன் பேட்டையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சித்த மருத்துவமனையை 50 படுக்கையில் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையாக மாற்றிட வேண்டும், திருச்சி குமரன் நகர், சீனிவாசன் நகர், உய்யக்கொண்டான் திருமலை, நாச்சிகுறிச்சி, சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை மற்றும் தோகமலை வழியாக அரவக்குறிச்சி செல்லும் சாலை,மிகவும் போக்குவரத்து நெரிசலான பகுதியாக உள்ளது, இந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால் திட்டம் என்கிற பெயரில் பணிகள் நடைபெறுகிறது, இதனால் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் திருச்சி மாநகராட்சி சுற்றி என் எச் 67 தேசிய அரை வட்ட சுற்றுச்சாலை பணிக்காக திட்டமிடப்பட்டு புங்கனூர்ஏரி, கள்ளிக்குடிஏரி, பிராட்டியூர், கொத்தமங்கலம்ஏரி, பஞ்சபூரிஏரி ,உட்பட 13 ஏரிகளை 200 அடி அகலத்தில் மண்ணைக் கொட்டி சாலை அமைப்பதை கைவிட்டு
தேசிய சுற்றுச்சூழல் அமைச்சக உத்தரவையும் சென்னை அண்ணா பல்கலைக்கழக நீதியல் துறை இயக்குனர் கருணாகரன் தலைமையிலான வல்லுநர் குழு அறிக்கையையும் சென்னை மதுரை உயர்நீதிமன்றங்கள் 15க்கு மேற்பட்ட வழக்குகளில் நீர் ஆதாரங்களை அளிக்கக்கூடாது என்கிற நீதிப்பேராண்மைகளையும், மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் கூடலூர் கரூர் திருச்சி காரைக்குடி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர்களும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தமிழக விவசாய சங்கம் அமைப்பின் தலைமையில் பொது நல அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது ஆகிய வழக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர்கள் பட்டியலிட்டு விசாரணைக்கு கொண்டு வந்து ஏற்கனவே புங்கனூர், கள்ளிக்குடி, கொத்தமங்கலம், ஏரிகளின் மையத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை அப்புறப்படுத்தி ஏரிகளுக்கு வெளியே தனியார் இடங்களை கையகப்படுத்தி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது போல்
பஞ்சப்பூர் தொடங்கி தஞ்சை சாலை பரந்தான்குளம், வரை 10 ஏரிகளை திட்டமிட்டு மண்ணைக் கொட்டி அழிப்பதை கைவிட்டு, உயர்மட்ட பாலங்கள் அமைத்து சாலை பணிகளை தொடர வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 29/12/2022 இன்று தண்ணீர் அருந்த தொடர் உண்ணா நிலை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இந்திலையில் முதல்வர் வருகையோட்டி பாதுகாப்பு முன் ஏற்ப்பாடுகள் காரணமாக திருச்சி மாவட்டம் சோம்பரசன் பேட்டை மேலப்பேட்டை கிராமத்தில் உள்ள அவரின் இல்லத்தில் ம.ப.சின்னத்துரையை சிறைபிடிக்கப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார், இதை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களுடன் வீட்டிலேயே கோரிக்கைகளை வலியுருத்தி தண்ணீர் அருந்த உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.