திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் ஆங்கில புத்தாண்டு 2023 தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு கொடுக்காபள்ளி விலாம் பழம் நெல்லி கொய்யா உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளவர தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் அனைவரது வாழ்விலும் வருமை நீங்கி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ விவசாயிகள் நல்ல விளைச்சல் பெற்று அவர்கள் வாழ்வில் பசுமையான செழிப்பான வாழ்வு அமைய இந்த புத்தாண்டில் ஆண்டு தினத்தில் அனைவரது வாழ்வும் சிறப்பாக மகிழ்ச்சியாக அமைய இந்த புத்தாண்டு தொடங்கவும் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இந்நாளில் திருச்சி எடமலைபட்டிபுதுரில் உள்ள குழந்தை இயேசு ஆலைய வளாகத்தில் பழ வகையிலான மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் நடும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் குழந்தை இயேசு திரு தலத்தை சேர்ந்த பங்குதந்தை அந்தோணி இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு கொய்யா நெல்லி கொடுக்காபல்லி விலாம் பழம் உள்ளிட பழவகையிலான மரகன்றுகளை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா விளையாட்டு பிரிவு செயலாளர் தடகள பயிற்ச்சியாளர் சுரேஷ் பாபு அன்பியத்தின் செயலாளர் சேவியர் இளைஞர் பிரிவு செயலர்கள் பார்திபன் கார்த்தி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் மற்றும் சிலம்ப விளையாட்டு மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வின் முடிவில் ஆலய வளாகத்தில் விலாம் பழம் நெல்லி உள்ளிட்ட பழவகையிலான மரகன்றுகள் நடப்பட்டது.