தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த சிறுதானிய உணவு திருவிழாவிற்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்துகொண்டு சிறுதானிய வகைகளை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.
இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பான் மசாலா மற்றும் குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்தாதீர் எனவும், சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் வாங்க வேண்டாம் எனவும், பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் FSSAI உரிமம் தயாரிப்பு தேதி காலாவதி தேதி ஆகியவை உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். அதிக கலர் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் எனவும்,
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர், உள்ளிட்ட விழிப்புணர்வும், அதேபோல் சிறுதானிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சோளம் தினை மற்றும் ரசாயனம் கலக்காத இயற்கை உணவு வகைகள் குறித்த ஸ்டால்களும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிறுதானிய ஸ்டால்களை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.