திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மார்கழி திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடத்தப்படுகிறது. சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உயர்வான ஆறுவகை அபிஷேகங்களில் ஒன்று ஆருத்ரா தரிசனம் திருமஞ்சனம். சிவ பூஜை செய்தால் தான் பலன்.
ஆனால் ஆருத்ரா தரிசனத்தை கண்டாலே புண்ணிய பலனை அள்ளித்தரக் கூடியது. திருவாதிரை என்ற சொல் சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என குறிப்பிடப்படுகிறது. திருவாதிரை அன்று நடராஜருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என்கிறோம். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய ஆருத்ரா தரிசனம் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு சந்திரசேகர் நடன மண்டபத்தில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா மகாபிஷேகம் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று ஆருத்ரா தரிசனத்தின் முக்கிய நிகழ்வான நடராஜப் பெருமான் ஆனந்த தரிசனம் நடராஜ பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை மாணிக்கவாசகர் புறப்பாடு மற்றும் விடையாற்றி அபிஷேகம் நடைபெற உள்ளது ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு ஆன்மீக சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உத்தரவின் பேரில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி செயல் அலுவலர் நித்யா தலைமையில் குருக்கள்கள் உட்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.