திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டுரில் உள்ள தனியர் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது, இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில் உங்களுடைய அண்ணன் சாணத்தில் இருக்கும் தமிழக முதல்வர் சீர்வரிசை பொருட்களை வழங்க வந்திருக்கோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்
இனிவரும் காலங்களில் உங்கள் உடல் நிலையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது,எது எப்படி இருந்தாலும் குழந்தை பெற்றதற்கு அப்புறம் குழந்தையை என்னிடம் தான் அனுப்பி வைக்கணும், பள்ளிகூடத்திற்க்கு நான்தான் அந்த குழந்தையை பாத்துக்க போறேன் அந்த வகையில் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பது உங்கள் கடமை,ஏழை எளிய மக்கள் வளைகாப்பு செய்ய முடியவில்லை என வருத்தத்தில் இருப்பார்கள் அதை போக்குவதற்காக தான் முத்தமிழ் கலைஞர் கொண்டு வந்த திட்டம் தான் இந்த திட்டம், பெண்களுக்கான சலுகைகள் முன்னுரிமை வழங்குவதுதான் இந்த கழக ஆட்சி என பேசினார்
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்