தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற கலைத்திரு விழாவில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் 25-பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய வயலின் சுவேதா, கிளாரினெட் நீலாம்பிகை மற்றும் 6- முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் செவ்வியல் நடனம்,
“கணியன் கூத்து” வீதி நாடகம் ஆகியவற்றில் 11-ம் வகுப்பு,12-ம் வகுப்பு மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கான பரிசளிப்பு சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்ட நிலையில் வெற்றி பெற்று பள்ளி வந்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்து செல்வன், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவரும் இணைந்து உற்சாக வரவேற்பளித்தனர்