திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தி பெண் ஆய்வாளர் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு தெருவின் உள்ள கடைக்கு செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது நியாயம்தானா பால் வாங்குவதற்காக வெளியே சென்றவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து உள்ளீர்கள் என கேட்டு பெண் ஆய்வாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பெண் ஆய்வாளர் நீங்கள் இப்படிக் கூட்டம் போடலாமா என கூறி அருகிலிருந்தவர்களை தள்ளி நில்லுங்கள் என சொல்ல. உடனே அங்கிருந்தவர்கள் முதலில் நீங்கள் மாஸ்க்கை சரியாக அணியுங்கள் என்று சொல்ல உடனே பெண் ஆய்வாளர் மாஸ்க்கை சரி செய்து கொண்டார். மேலும் கிராம மக்கள் பெண் ஆய்வாளரை பார்த்து நாங்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து உள்ளோம் எங்களை தள்ளி நில்லுங்கள் என்று மாஸ்க் அணியாமல் சொல்லும் உங்களால்தான் எங்களுக்கு கொரோனா பரவும் என கூறி பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது