தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார் கண்ணன் ராஜா ஐயர் முன்னிலை வகித்தனர்.இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிச்சைமுத்து தமிழரசன் பார்த்திபன் சேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் 2022 ஆண்டில் உறுப்பினர் பட்டியல் அடிப்படையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் இதில் கண்ணன் மாவட்ட தலைவராகவும் பிச்சைமுத்து செயலாளராகவும் செல்வம் பொருளாளராகவும், மற்றும் துணைத் தலைவர் துணை செயலாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டன. புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் சிறப்பாக களப்பணி ஆற்றிடமும் மாநில தலைவர் சரவணன் மற்றும் மாநில செயலாளர் முருகானந்தம் வாழ்த்து தெரிவித்தனர் மேலும் விரைவில் நடைபெறும் மாநில பொதுக்குழுவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களையும் கலந்து கொள்ள முயற்சி செய்து வருவது என முடிவு செய்யப்பட்டது.