திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்ததற்கான 301 பேருக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 98 பேருக்கு அணிவித்தார். அப்போது மணக்கோலத்தில் வந்த தம்பதிக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி பிரிவில் பணிபுரிந்து வரும் செல்வமணி சிறப்பாக பணிபுரிந்தமைக்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் திருமண கோலத்தில் வந்து பெற்றார்.