திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சாலை பாதுகாப்பு மன்றம், பிஷப் ஹீபர் கல்லூரியின் லியோ கிளப், திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அபிராமி ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இப்பேரணியை காவல் உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, நீதிமன்றம் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தலைகவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில்கல்லூரி முதல்வர் பால் தயாபரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன், அபிராமி பயிற்சி பள்ளியின் உரிமையாளர் பூங்கொடி சுப்ரமணியன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், காவல் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.