தமிழ்நாடு எலக்ட்ரிக் சிட்டி போர்ட் எம்பிளாய் ஃபெடரேஷன் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜோதி கண்ணன், பொருளாளர் பாஸ்டின் ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநில பொது செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
ஊதிய உயர்வு குறித்து மூன்றாண்டுகளுக்கு பிறகு மின்சார வாரியம் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. காலி பணியிடங்களில் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் 1000 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் பகுதி நேர பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது அதற்கு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் மூன்றாண்டு நிலுவை தொகை யோடு 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.