திருச்சி பாலக்கரை கெம்ஸ்டோன் பகுதியில் உள்ள சந்தியாகு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி வேளாங்கண்ணி இவரது மகன் பெஞ்சமின் பிராங்கிளின் வயது 27 இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தாய் வேளாங்கண்ணியின் புடவையால் வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட பெஞ்சமின் பிராங்கிளின் வேலையில்லாத காரணத்தாலும் திருமணமாகாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மேலும் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.