மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற ரவுடி மீது வழக்கு பதிவு என செய்தி வெளியானது. இது சம்பந்தமாக வரிச்சியூர் செல்வம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கையில். அதில் தன்னை ரவுடி என்று கூற வேண்டாம் எனவும் கோமாளி என்று கூறினால் சந்தோஷப்படுவேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் திருச்சி பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யா சிவா அவரது ட்விட்டர் பக்கத்தில் என்னை ரவுடி என பதிவு செய்திருந்தார் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் என பேட்டியளித்தார்.
இது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் வரிச்சூர் செல்வம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சூரிய சிவா தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டதற்கு. மறுப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சூரிய சிவா நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் எனக்கூறி அதற்கான ஆடியோவை யும் வெளியிட்டார். நான் இன்று வரை பாஜ.க பிரமுராக தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜ.க.தலைமை இன்னும் எற்றுக்கொள்ள வில்லை. 2026ம் வரை அண்ணாமலை பாஜக தலைவராக இருப்பார். அப்போது தனிப்பெருபான்மையுடன் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும். அப்போது அண்ணாமலை தான் முதல்வர் என்று கூறினார்.