திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டரணி மாவட்ட செயலாளர் ஆரிப் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் பக்ருதீன் மேற்கு தொகுதி துணை தலைவர் KSA.ரியாஸ் மற்றும் தொகுதி செயலாளர் முஹம்மது சலீம்,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதூர் ரஹ்மான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் மற்றும் மேற்கு தொகுதி தலைவர் சிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன உரையாற்றினார்கள்.இறுதியாக கிளை செயலாளர் இரும்புக் கடை முஸ்தபா அவர்கள் நன்றியுரையாற்றினார்..