திருச்சி, கேர் கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல், கலை அறிவியல், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ஷர், பிசினஸ் ஸ்கூல் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் கேர் கல்வி குழுமத்தில், மாணவர்கள் நிறங்களின் அடிப்படையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாண்மையான மாணவர்கள் பங்குப்பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவிற்கு. 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், புதிய சாதனையுடன், இந்திய மண்ணில் 1 நிமிடம் 47 வினாடிகளுக்குக் கீழே ஓடிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு உரியவரும், ஹெல்சிங்கியில் நடைபெற்ற முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியவரும்,
1984-ல் அமெரிக்கா மற்றும் 1985 ஆம் ஆண்டு ஆசிய தட்கள மற்றும் SAF விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றவரும், அர்ஜுனா விருதுப் பெற்ற, பத்மஸ்ரீ, சார்லஸ் பொரோமியோ சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக. கேர் கல்வி குழும மாணவர்களின் விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ப்ரதீவ் சந்த் தலைமை வகித்தார். கேர் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாந்தி, கேர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார், கேர் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ஷர் துறைத்தலைவர் ஜூடித் பெலிண்டா லாரா, டீன் முனைவர் பசும்பொன் பாண்டியன் மற்றும் பல்துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்..