திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் வியாபாரிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கொரானா எனும் பெரும் தொற்று குறைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பிரச்சனையாக உள்ள இந்தக் காலகட்டத்தில் சிறு குறு வணிகர்கள் வணிகம் செய்ய பணத்திற்கு சிரமப் படுவதால் தங்களிடம் உள்ள சிறிய நகைகளை அடகு வைத்து சிறுதொழில் நடத்த ஏதுவாக தாங்கள் தயவு கூர்ந்து சிறு மதிப்பிலான அடகுக் கடைகளை திறக்க அனுமதி அளித்து ஏழை வணிகர்களின் வாழ்வில் வணிகம் செய்து ஒளியேற்றிட வேண்டியும், அதேபோல் சமீபகாலமாக நோய்த்தொற்று பரவியதை முன்னிட்டு துணிக்கடைகள் பர்னிச்சர் கடைகள் பூட்டப்பட்டு வருமானமின்றி வணிகம் முடங்கிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு விதிகளுக்கு உட்பட்டு தங்களின் ஆணைக்கிணங்க எங்கள் வணிகர்கள் வணிகம் செய்ய துணிக்கடைகள் பர்னிச்சர் கடைகள் திறக்க அனுமதி அளிக்க கோரி மனு அளித்தனர்.