திருச்சி மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி உடைய 2ஜி அலை கற்றுக்கான கோபுரம் முறிந்து விழுந்தது.
அமைச்சரின் பாதுகாப்பிற்காக வந்த காவலர்கள் உடனடியாக சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அப்பகுதி வழியே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வளியே வரும் பொது மக்களுக்கு மாற்று பாதையில் செல்ல அறிவித்தப்பட்டுள்ளது.
130 அடி உயரம் உள்ள இந்த வயலர்ஸ் டவர் முறிந்து கீழே விழுந்த போது, மின்மாற்றின் அருகில் இருந்த மின் கம்பிகளுக்கிடையே டவரின் உடைந்த பகுதிகள் சிக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதியும் முழுவதும் மின் இணைப்பு தடைபட்டது. உடைந்த டவரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.