திருச்சியில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் புளிவளம் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார் இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று ஜூன் 11 மாலை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். திருச்சியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆக்ஸிஜன் வசதிகள், படுக்கைகள், மற்றும் மருத்துவமனை அடிப்படைவசதிகள் குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதாவிடம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கேட்டறிந்தார்.


திருச்சி அரசு மருத்துவமனையில் அதிக அளவில் படுக்கைகள் காலியாக உள்ளது. இதனால் திருச்சியில் கொரோனா பாதிப்பு படி படியாக குறைந்து வருகிறது என தெரிகிறது. தடுப்பூசி திருச்சி மாவட்டத்தில் அதிக அளவு போடப்பட்டுள்ளது என கூறினார்