மகேந்திராவின் புதிய படைப்பான இந்தியாவின் நம்பர் ஒன் பிக்கப் வாகனமான புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மேலாளர் மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். பொது மேலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மகேந்திரா ஏ.எஸ்.எம் அதிகாரிகள் ஜெயந்த் மற்றும் ஆமோஸ் கலந்து கொண்டனர்.
விழாவில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய படைப்பான பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் அறிமுக விழா மற்றும் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. மேலும் பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தின் சிறப்பு அம்சங்களை துணைப் பொது மேலாளர் சரவணன் கூறினார்:
அதில் மகேந்திரா மேக்ஸ் பிக்கப் வாகனத்தை பார்க்காமல் ஒரே நாளில் 10 பேரும் ஐந்து நாட்களில் இதுவரை 47 பேரும் புக் செய்து உள்ளனர். நாளை முதல் வாகனங்கள் டெலிவரி செய்யப்படும். மேக்சிமம் என்றால் மிகவும் அதிகம். இந்த வாகனத்தில் மேக்சிமம் பிக்கப்,மேக்சிமம் மைலேஜ்,மேக்சிமம் பிராஃபிட்,மேக்ஸிமம் சேஃப்டி,மேக்ஸிமம் டெக்னாலஜி என அனைத்தும் அதிகம் என வாடிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்து கூறினார்.
மேலும் இந்த வாகன அறிமுக விழா மற்றும் விற்பனை துவக்க விழாவில் வாடிக்கையாளர்கள் பொலிரோ மேக்ஸ் பிக்கப் வாகனத்தை உடனடியாக புக் செய்தனர். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியாக ஏரியா மேலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.