திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறிகடை நடத்தி வருபவர் சாதிக் பாஷா இந்நிலையில் கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீரங்கம் விஏஓ கலைவாணி என்பவர் நேற்று மாலை சாதிக் பாஷா கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக புளி வாங்கியதாகவும், புளி சரியில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விஏஓ கலைவாணி தனது கையில் இருந்த புளியை சாதிக் பாஷா கடை மீது வீசி எரிந்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு விஏஓ கலைவாணியின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் திடீரென சாதிக் பாஷா கடை முன்பு குவிந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி அங்கிருந்த கடை பொருட்களை சேதப்படுத்தினர் மேலும் அவரது கடையில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் பணத்தையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் சாதிக் பாஷா பெண் விஏஓ மீது புகார் அளித்தார்.
மேலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வர்த்தக அணி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா தலைமையில் நிர்வாகிகள் இன்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து வியாபாரி மீது தாக்குதல் நடத்தியவர்களான ஸ்ரீரங்கம் விஏஓ கலைவாணியை கைது செய்து பணி நீக்கம் செய்யக் கோரியும் மற்றும் அவரது ஆதரவாளர்களான 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மனு அளித்தனர்.