திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் பட்டாம்பூச்சி பூங்காவில் இருந்து யாத்திரி நிவாஸ் வரை தொடரும் மணல் கொள்ளையை தடுக்க கோரி பலமுறை கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் மணல் கொள்ளை சம்பந்தமாக ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 81 வழக்குகள் மணல் கடத்தல் சம்பந்தமாக பதியப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் வாயிலாக தெரிந்து கொண்டோம் எனவே திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்குமாறு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அருகில் வீரா, தருண், தினேஷ் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் ஷைனிஆகியோர் உடன் இருந்தனர்.