மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது வழங்கிடும் பொருட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளிடமிருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரசு வளாகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் (0431-2412726) 25.06.2023-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப் படுகிறது. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.