தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து வாழ்வாதார இழந்த பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர், சமூக நல அமைப்பினர் மூன்று வேளை உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரா மீட்டர் ஆட்டோ ஓட்டுநர் அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் தலைமையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஊரடங்கு அறிவித்த நாள் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து சிறு தொகைகளை சேர்த்துதொடர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.


தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ ஓட்டுநர்கள் நாங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் இணைந்து சிறிய தொகை கைகளை ஒன்று சேர்த்து பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். மேலும் பல்வேறு பணிகள் சேவைகள் செய்து வருகிறோம் என கூறினார்.