இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக 2ம் நாள் தொடர் மறியல் போராட்டம் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருவரங்கம் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது . இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக விலைவாசி உயர்வை குறிக்கும் வகையில் காய்கறிகளை மாலையாக அணிந்து ஒன்றிய மோடி அரசே வெளியேறு என ஊர்வலமாக கோஷமிட்டு வந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில் மறியலில் ஈடுபட்டு காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இதில் AITUC மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் M.C தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தை மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர். செல்வராஜ் மறியலை துவக்கி வைத்து உரையாற்றினார் . மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் இப்ராஹிம், கட்சியின் மேற்கு பகுதிச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு கட்டைகளை தாண்டி தள்ளு முள்ளுகளுக்கு இடையில் ரயில் நிலையம் அருகிலேயே தரையில் அமர்ந்து மறியல் செய்து ஒரு மணி நேரத்திற்கு பின்பு அனைவரும் கைது செய்யப்பட்டனர்..