திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவில் இன்று விடியற்காலை ஜீவாசின்னத்துரை என்பவரின் வீட்டின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட ஜீவா சின்னதுரை வீட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டு நிவாரண உதவியாக ரூபாய் 20 ஆயிரமும் , அரிசி , காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினார் . அருகில் முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்