திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தமைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவித்ததார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் முடி திருத்தும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மேலும் இதே போன்று பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள் கூறி நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.