திருச்சி அரியமங்கலம் உக்கடை வடக்கு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று மதியம் 3 மணி அளவில் மின்மாற்றில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியது இதைக் கண்ட அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் உடனடியாக மின்சார அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்
புகாரின் அடிப்படையில் மின்சார ஊழியர் ஒருவர் மட்டும் வந்து மின் டிரான்ஸ் பார்மர் சரி செய்து மின் இணைப்பு கொடுத்தார் ஆனால் மீண்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தீப்பொறி கிளம்பியது மீண்டும் மீண்டும் சரி செய்து முயற்சி செய்தார் ஆனால் டிரான்ஸ் பார்மரில் தீப்பொறி எரிய ஆரம்பித்ததால் மின் இணைப்பை துண்டித்து விட்டு முயற்சி செய்து தீயை அணைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது இருப்பினும் மின்வாரிய ஊழியரின் முயற்சியால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த டிரான்ஸ் பார்மர் அமைத்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது ஆகையால் இதில் அடிக்கடி தீப்பொறிகள் வரும் ஆனால் இந்த முறை பெரிய அளவில் தீ பிடித்தது இதனால் டிரான்ஸ் பார்மர் வெடித்து விடுமோ என்று பயத்தில் இருந்தோம் தற்பொழுது மின் இணைப்புகள் இப்பகுதியில் அதிகமாகி விட்டதாலும் மும்முனை இணைப்பு பெற்று அதிக மின் இணைப்புகள் பயன்படுத்துவதாலும் அதற்கென்று தனி டிரான்ஸ் பார்மர் அமைக்காததாலூம் மின் அழுத்தம் அதிகமாகி இது போன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது எனவேஇந்த பழைய மின் இணைப்பு மாற்றி புதிய மின் இணைப்பு மாற்றி வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.