இந்தியர்களாய் இணைவோம், மனித நேயம் காப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போட்டியை அமைச்சர் கே.என். நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். நீதிமன்ற சாலை யில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக 5 கி.மீ தூரத்தை கடந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது.
போட்டியில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, திருச்சி சிஎஸ்ஐ பேராயர் சந்திரசேகரன், மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் அன்பழகன், சர்வதேச தடகள வீரர் நல். அண்ணாவி, மாணவர் சங்கமாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மதிமுக துணை பொதுச்செயலாளர் ரொகையாஷேக் முகமது, வாலிபர் சங்க மாநில துணை தலைவர் லெனின், மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சக்திவேல்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க செயல் தலைவர் சந்தான சாமி, ஆசிய வலுத்துக்கும் போட்டியில் ஆசியாவின் இரும்பு மனிதர் பட்டம் பெற்ற மணிமாறன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ 5000, இரண்டாம் பரிசாக ரூ 3000, ஊக்க பரிசாக 10 பேருக்கு தலா ரூ 1000ம் வழங்கினர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளைஇந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர்கள் ஹரி ராமச்சந்திரன்,தீனா மாவட்ட துணை செயலாளர் ஹரி பிரசாத், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி நன்றி கூறினார்.