தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், திருச்சி விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் விடுதலைக்களம் அமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாநில சட்ட ஆலோசகர் வேங்கைராஜா சிறப்புரையாற்றினார். தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.