தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் மேல்நிலைப்பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்புரை ஆற்றினார் மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து இயக்க செயல்பாடுகள் பற்றியும் மாநில பொருளாளர் இளங்கோ நிதியும் பொது நிகழ்வு பற்றி எடுத்துரைத்து கூறினார். தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-
கடந்த 2018 பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்று உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்கால பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் அதேபோல் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் மேலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை 5.2 என்ற நடைமுறையில் இருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக 7.2 என மாற்றப்பட்டுள்ளது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5.2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் குறவளர்கள் அருள் சுந்தரராஜன் முனைவர் சாமி சத்தியமூர்த்தி நடராஜன் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் மாநில துணைத்தலைவர்கள் மாநில இணைச்செயலாளர்கள் மாநில மகளிர் அணி அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.