தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நிர்வாகி ராஜூ தலைமை தாங்கினார். முன்னதாக நிர்வாகி சேகர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் திருச்சி என் டி வி உரிமையாளர் சுதர்சன், கோவை யு டிவி உரிமையாளர் சிரஞ்சீவி,
மதுரை ஆனந்தம் டிவி உரிமையாளர் அசோக் குமார், திருநெல்வேலி மயூரி டிவி உரிமையாளர் ஆறுமுக நாயனார், கரூர் வானவில் டிவி உரிமையாளர் செந்தில் குமார், திருவாரூர் ஜெய் டிவி உரிமையாளர் ஜெயக்குமார், சென்னை அன்னை டிவி உரிமையாளர் ரமேஷ் குமார், தூத்துக்குடி கிங் டிவி உரிமையாளர் அன்பரசன், ராணிப்பேட்டை பாலாறு டிவி உரிமையாளர் ஸ்ரீதர், திருவண்ணாமலை கேஜி டிவி உரிமையாளர் குமார், காஞ்சிபுரம் சக்தி டிவி உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மாநில தலைவர் வெள்ளைச்சாமி, மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் நிகழ்ச்சியில் டிசிஒஏ மாநில துணை நிர்வாகிகள் தணிக்கை வேல் தாமோதரன் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் இந்த கருத்தரங்கில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரசன்னா கலந்து கொண்டு தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு குறித்தும் அதன் தற்போதைய நிலைபாடு குறித்தும் மற்றும் சங்க உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். இந்த கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக சங்க நிர்வாகி சையது அக்சர் நன்றி உரையாற்றினார்.