தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பிலும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பிலும், முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சி ஒத்தகடை பகுதியில் 8.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நூலகத்துடன் கூடிய 4 அறிவுசார் மைய பசுமைக் கட்டிடங்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,சிறப்பு உறைவிட கட்டடம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரலையில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.