தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன அதேபோல் வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு ரூ.3.9 கோடி மதிப்பீட்டில் திறப்பு விழாவிற்கு தயாரான பணிகள், ரூ.12.91 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தயாரான பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். தொடர்ந்த 1500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.