இந்திய நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கிகளை கையாளும் நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் நுண்ணறிவு திறன் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விமான நிலைய ஊழியர்களுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் விமான நிலைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் பேசுகையில் :- இன்று நாம் 75 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம் உலகில் மிகவும் நேர்த்தியான சட்டம் நமது சட்டம் திருச்சி விமான நிலையம் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளது.
கடந்த டிசம்பர் 23 வரை 12.80 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளோம் 10350 விமானம் கையாண்டு உள்ளோம் 6000 பயணிகளை நாளொன்றுக்கு கையாண்டு வருகிறோம் 117 கோடி வருவாய் அதிகரித்து உள்ளோம். இந்திய பிரதமர் மோடி புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தது பெருமை புது முனையம் 7500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டி உள்ளோம் பயணிகள் கொள்ளவியாவு 3408 , 60 சோதனை கவுண்டர் உள்ளது