திருச்சி மாநகரில் மத்திய பஸ்நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவுநேரங்களில் சாலையோரங்களில் திருநங்கைகளால் பாலியல்தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாகபொது மக்களிடம் இருந்து அதிகஅளவில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில்,
3 பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 18 போலீசார் 3 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பஸ்நிலையம், மன்னார்புரம், சஞ்சீவிநகர் சந்திப்பு மற்றும் அரிமயங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவுநேரங்களில் சுற்றி திரிந்த 40 திருநங்கைகளை பிடித்து எச்சரித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், எச்சரிக்கையை மீறி சாலைகளில் மீண்டும் சுற்றி திரியும் திருநங்கைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பொதுமக்கள் நலன்கருதி திருநங்கைகள் இரவுநேரத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்து கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு இரவுநேர ரோந்து தொடர்ந்து நடத்தப்படும் போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.