தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதும் முதல் கையெழுத்தாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் திருச்சி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன முதல் நாளான இன்று தமிழக அரசு அறிவித்த படி பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.