தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய தீயணைப்பு நிலைய அலுவலகம், அதிநவீன தீயணைப்பு கட்டுப்பாடு அறை மற்றும் குடியிருப்புகள் அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், தர்மபுரி மாவட்டத்தில் புதிய நூலகம் கட்டிடம் மற்றும் பதிய வகுப்பறைகள் கட்டிடங்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்திற்கு 139 கோடி மதிப்பீட்டில் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள் ஆகிய பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி திருவெறும்பூரில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நவல்பட்டு ஊராட்சித் தலைவர் ஜேம்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.