திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சோளம் பயிரிட்டு விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்கிடவும், தமிழக விவசாயிகளை வாழ வைக்காமல், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கும் திமுக அரசை கண்டித்தும்,
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி பிரிவு சார்பில் விவசாயிகள் ஏராளமானோர் பாமாயில் எண்ணெயை சாலையில் கொட்டியும், பாதிக்கப்பட்ட சோள பயிர்களுடன் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.