தேசிய வீட்டு வேலை தொழிலாளர் மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரம்மாள், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சீத்தாலட்சுமி, திருச்சி மாவட்ட அமைப்பாளர் மகாலட்சுமி , மதுரை மாவட்ட அமைப்பாளர் பேச்சியம்மாள் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-.
நாங்கள் தேசிய வீட்டுவேலைத் தொழிலாளர்கள் மேடை. இது ஒரு தேசிய அளவிலான கூட்டமைப்பு இந்த அமைப்பில் மாநிலங்களில் 60 சங்கங்களும் தேசிய அளவில் 2 சங்கங்களும் இணைந்து தேசிய அளவில் வீட்டுவேலைத் தொழிலாளர்களின் முழுமையான சட்டம் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு, இ.எஸ்.ஐ. வாழ்வதற்கான ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வைத்து செயல்பட்டு வருகிறோம் . மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனி சட்டம் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து அதிகாரிகளை சந்தித்து வருகிறோம்.2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் களுக்கான 4 வரைவுச் சட்டத்தில் பல தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை குறிப்பாக வீட்டுவேலைத் தொழிலாளர்கள் எதிலும் மாநிலத்திலும் உள்ள சங்கங்கள் சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சங்கங்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். ஆனால் நமது நாட்டில் பல அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. பெரும்பான்மையான விவசாய தொழிலாளர்கள் பாரம் பரிய தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகள் மறுக்கப் படுகின்றன. தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் பல மணிநேரம் வேலை செய்ய வற்புறுத்தப் படுவதோடு நியாயமான ஊதியம் இல்லாமலும், ஓய்வு இல்லாமலும் அல்லலுறும் அவல நிலை தொடர்கிறது.
இவர்களை பாதுகாக்க நமது நாட்டிலும், மாநிலத்திலும் எந்தவிதமான சட்டங்களும் இல்லை. இவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு மறைமுகமாக செயல்பட்டு வருகிறார்கள் . 90 சதவீதம் தொழிலாளர்கள் பெண்கள். இவர்கள் பெண்களாக இருப்பதால் பல விதமான துன்புறுத்தலுக்கும, பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள் வருகின்ற தேர்தலில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பாராளுமன்ற வேட்பாளர்களுக்கும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.எங்களது கோரிக்கைகளான வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உள்ளடக்கி மத்தியிலும், மாநிலத்திலும் சட்டம் கொண்டு வந்து விரைவில் செயல் படுத்த வேண்டும் ஒவ்வொரு மாநிலத்திலும் முத்தரப்பு வாரியம் அமைத்து இவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வீட்டுவேலைத் தொழிலாளர்களை இ.எஸ.ஐ., பி.எப் பிடித்து மாதம் ரூ. 5000-த்திற்கு குறையாமல் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.