திருச்சி தென்னூர் அண்ணா நகர் 2வது தெருவில் பிக் ட்ரீ இயர்லி லேர்னிங் சென்டர் என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த பள்ளி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் அருகில் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது. பிக் ட்ரீ இயர்லி லேர்னிங் சென்டர் நிர்வாக குழு நிறுவனர் ஜோன் ஜெயசீலன் ஆகியோர் உள்ளனர்.
மேலும் இந்த பிரீமியம் கிண்டர் கார்டன் பள்ளியில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆஃப்டர் ஸ்கூலிங் புரோகிராம், டியூசன் சென்டர், ஆக்டிவிட்டி சென்டர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதிலும் குழந்தைகளின் தனித் திறமைகளை ஊக்குவிப்பது, குழந்தைகளுக்கென நூலகம், யோகா, தியானம் பயிற்சி, ஜிம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகிறது. இந்த பள்ளி திறப்பு விழாவில் ஷாலோம் எண்டர்பிரைசஸ் ஆலோசகரும், தி ஹிந்து செய்தியாளரருமான கிதியோன் ராஜ் உள்பட பெற்றோர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.