தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டியின் 108 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் திருச்சி தமிழ் சங்க கூட்ட அரங்கில் அகமது பிரதர்ஸ் உரிமையாளரும், தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டியின் தலைவருமான உமர் இக்பால் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பொதுச் செயலாளர் சமுதாய கவிஞர் சையது ஜாபர் வரவேற்புரை ஆற்றினார். இணை செயலாளர் சயஜாகிர் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை திறன் திசைகாட்டும் கருவிகளா? அல்லது திசை மாறிய பறவைகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது இந்த பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கினார்.
முன்னதாக திசை காட்டும் கருவிகளே என்னும் தலைப்பில் முனைவர் நீலகண்டன் காமெடி கலாட்டா அன்னலட்சுமி ஆகியோரும் திசை மாறிய பறவைகளே என்ற தலைப்பில் முனைவர் பாஸ்கர் கீதக்குயில் கிலோனா மணிமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.