திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து ஆனந்திமேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால் தண்ணீர் குறைவாக இருப்பதால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் தேவைக்காக ஆனந்திமேடு கிராமம் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ராட்சத கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லால்குடி ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஆனது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது போராட்டம் நடத்துபவர்களிடம் லால்குடி சரராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும் மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.