தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் புரவலர் பூரா விஸ்வநாதன் தலைமை தாங்கினார் மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்தன் வரவேற்புரை ஆற்றிட மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் மாநில துணைச் செயலாளர் சுப்ரமணி மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவளிப்பது எனவும், 39 தொகுதிகளிலும் விவசாயிகளிடம் ஆதரவு கேட்டு திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்வது எனவும்.
மேலும் மத்தியில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தல் விவசாயிகள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கிடைக்க சட்டம் கொண்டு வர வேண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் புதிய மின்சார திட்டம் ரத்து செய்ய வேண்டும் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக அறிவித்து விவசாய பணிகளுக்கு திருப்பி விடுதல் வேண்டும் அரியலூர் பெரம்பலூர் ஆத்தூர் வரையிலும் பெரம்பலூர் துறையூர் நாமக்கல் வரையிலும் ரயில்வே திட்டம் கொண்டு வந்து பயணிகள் ரயில் விடுதல் வேண்டும் சரபங்கா நதி திட்டமான மேட்டூர் உபரி நீர் கால்வாய் திட்டம் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.