இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் திருச்சி பொன் நகர் பகுதியில் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார வாகனத்தில் சென்றார்.
அப்போது கவுன்சிலர் ராமதாஸ் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை பார்த்து அவரது கையைப் பிடித்து கவுன்சிலர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தண்ணீர் கொடுத்து சால்வை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மீது திமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமமுக வேட்பாளரும் செந்தில் நாதனுக்கு , திமுக கவுன்சிலர் ராமதாஸ் சால்வை அணிவித்து வாழ்த்த கூறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திமுக கவுன்சிலர் ராமதாஸ் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனின் கையைப் பிடித்து அழைத்து சென்று அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் மதிமுக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.