பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார் இவர் தாப்பேட்டை ஒன்றியம் அயித்தாம்பட்டி, தும்பலம் வாளசிராமனி, வேலம்பட்டி ஊர் அக்கரை தாப்பேட்டை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சுற்றுப்பயணம் செய்து ஐ ஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசுகையில் நான் கல்வியாளன் என்பதால் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டிடங்கள் வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளேன் சமுதாயக்கூடம் ரேஷன் கடைகள் என புது கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளேன்.
1700 மாணவ மாணவிகளுக்கு இந்தியாவிலேயே எவரும் செய்யாத அளவிற்கு 118 கோடி ரூபாய் எனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்து உயர்கல்வி இலவசமாக அளித்துள்ளேன் எதிர்வரும் காலங்களில் 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து 10 லட்சம் இன்சூரன்ஸ் செய்து அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் அரியலூர் பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு செல்லும் ரயில் பாதை பணிகளுக்கு பிரதமரிடம் பலமுறை பேசி அனுமதி பெற்று பணிகள் நடந்து கொண்டிருக்கிறது மீண்டும் நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக பணியை முடித்து தாப்பேட்டை வழியாக ரயில் செல்ல முயற்சி செய்வேன் என தெரிவித்தார.