சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான அணிகள் பங்கு பெற்றன. இதில் திருச்சி எஸ்.பி.ஐ.ஓ மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவிகள் ஈஸ்வரி மற்றும் ஜெனிபர் ஆகியோர் தமிழகம் சார்பில் தென்னிந்திய அணியில் பங்கு பெற்று, போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை வென்றனர்.
இந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இந்திய சாப்ட்பால் சங்க சேர்மன் பிரவின் அனனோகர்பொதுசெயலாளர் எல்.ஆர்.மௌரியா ,
தமிழ்நாடு சாப்ட்பால் சங்க தலைவர் பாலமுருகன் செயலாளர் மாதவன் திருச்சி சாப்ட்பால் சங்க தலைவர் DJ வெங்கடேசன்துணைத் தலைவர் இளங்கோவன், சத்தியமூர்த்தி, ரகுபதி செயலாளர் சரவணன் பயிற்சியாளர் சூரி ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில்200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.