108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் கோவில் . ஶ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தரிசனம் மேற்கொள்ள இன்று காலை வருகை தந்தார்..
தென் சென்னையில் போட்டியிடுவதால் தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.. அவர் ராஜினாமா பிறகு சிபி ராதாகிருஷ்ணன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வருகிறார் அவருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரங்கா ரங்கா கோபுர வாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி மூலவர் பெரிய பெருமாள் சன்னதி தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி இராமானுஜர் சன்னதி உள்ளிட்ட சந்ததிகளுக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஜார்கண்ட் ஆளுநர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடையே நலம் விசாரித்தார் .கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது..கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார் சிபி ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்தார் என குறிப்பிடப்பிடத்தக்கது