திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT – SUV கார் அறிமுக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO கிருஷ்ணஸ்வாமி, பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் விற்பனை மேலாளர்கள் முன்னிலையில்

 புதிய மஹிந்திரா XUV 3XO COMPACT – SUV ரக கார் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இதன் ஆரம்ப விலை 7.49 லட்சம் முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட புதிய காரின் அம்சங்களை பார்வையிட்டனர். மேலும் வாடிக்கையாளர்கள் புதிய வரவான மஹிந்திரா XUV 3XO COMPACT – SUV ரக காரை முன்பதிவு செய்தனர். இந்த அறிமுக விழாவிற்கான ஏற்பாடுகளை மகேந்திரா கார் ஷோரூம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்