அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

 அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், திருச்சி மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *